1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 2 மே 2022 (17:04 IST)

நடிகர் சங்க பதவியை ஏற்று கொள்ள கமல் ஒப்புதல்!

kamal nadigar sangam
நடிகர் சங்க பதவியை ஏற்று கொள்ள கமல் ஒப்புதல்!
நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் பாண்டவர் அணியினர் வெற்றி பெற்று பதவிகளை பிடித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கமல்ஹாசனை சந்தித்தனர் 
மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின் போது நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கமல்ஹாசனிடம் கோரிக்கை வைத்தனர் 
 
இந்த கோரிக்கையை கமல் ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் இந்த பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது