‘த்ரிஷ்யம் 2’ இந்தி ரீமேக் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மோகன்லால் மீனா நடித்த த்ரிஷ்யம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் வெளியானது என்பதும் மோகன்லால் மீனா நடிப்பில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்தின் ஹிந்தி ரீமேக் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அஜய் தேவ்கன் தபு உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அபிஷேக் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்