திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (07:25 IST)

’புரொஜக்ட் கே’ படத்தின் டைட்டில் ‘கல்கி 2898AD’: கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்..!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்க இருக்கும் ’புரொஜக்ட் கே’ என்ற படத்தின்  கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘கல்கி 2898AD’ என வைக்கப்பட்டுள்ளது 
 
2898ஆம் ஆண்டு நடைபெறும் கல்கி அவதார நிகழ்ச்சியின் கதை அம்சம் கொண்டது இந்த படம் என்பது கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 
 
இந்தியாவின் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படம்  கிட்டத்தட்ட 30 ஆம் நூற்றாண்டு படமாக உருவாக இருப்பதால்  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=bC36d8e3bb0&t=75s
 
Edited by Siva