திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2023 (10:46 IST)

பிரபாஸ்- கமல் இணைந்துள்ள #ProjectK படத்தின் முக்கிய அப்டேட்! வியப்பில் ரசிகர்கள்

பிரபாஸ்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பாகுபலி1-2 ஆகிய படங்களுக்குப் பின் இவரது மார்க்கெட் உயர்ந்தது, இந்தியா முழுவதும் பிரபலமாகி, பான் இந்திய ஸ்டாராக அறியப்படுகிறார்.
 

தற்போது, கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில்,சலார் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,பிரபாஸின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஜிமிப்ஸ் வீடியோ அமெரிக்காவில் உள்ள காமிக் கான்  மற்றும் பிரபலமான டைம்ஸ் ஸ்கொயரில் ஆகிய இடங்களில்  ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி இந்த ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல், பிரபாஸின் அமெரிக்க ரசிகர்கள் இணைந்து, புராஜெக்ட் கே படத்தின் ‘’கே ‘’ என்ற ஆங்கில எழுத்து வரும்  வரும்படி ஒரு கார் பேரணியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தின் ஷூட்டி முடிவடைந்து வரும் 2024 ல் இப்படம் ரிலீஸாகும் என்றும், இப்படம் இந்தியாவில் 10 மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.