களவாணி 2 காலைக்காட்சி ரத்து – பின்னணி என்ன ?

Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (14:16 IST)
இன்று ரிலிஸாவதாக இருந்த படத்தின் காலைக் கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமல், ஓவியா நடித்து 2010ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் களவாணி. இயக்குனர் சற்குணம், ஓவியா ஆகியோருக்கு அறிமுக படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது களவாணி. படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பாகமான “களவாணி 2” இன்று ரிலிஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில பல காரணங்களால் இன்று காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகள் முடிந்த பின் மாலைக்காட்சி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் ரிலிஸாகவில்லை என விசாரித்ததில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சற்குணம் படத்தில் நடித்த துணை நடிகர்கள் மற்றும் வில்லன் ஆகியோரிடம் சிலபல லட்சங்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அதை முறையாகத் திருப்பித் தராததால் வந்த விளைவு எனக் கூறுகிறது கோலிவுட் பட்சி.

ஏற்கனவே தயாரிப்பாளர் சிங்காரவேலன் இந்த படத்தினை ரிலிஸ் செய்யக்கூடாது என நீதிமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :