பாரதிராஜா ராஜினாமாவால் தள்ளிப்போகும் இயக்குனர் சங்க தேர்தல் !

Last Modified புதன், 3 ஜூலை 2019 (11:47 IST)
இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளதால் தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக ஒருமனதாகப் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சங்கத்துக்குள்ளேயே இதனால் புகைச்சல் உருவானது. இதையடுத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா. மேலும் ‘ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக பதவியை ராஜினாமா செய்கிறென்.தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வானதால் ஏற்படும் சங்கடங்கள் உருவாகுவதை தவிர்ப்பதற்காகவே இதைச் செய்துள்ளேன்.மூத்த இயக்குநராக சங்க வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும்’ என்று தெரிவித்தார்.

அவரின் ராஜினாமாவால் ஜூலை 14 ஆம் தேதி நடக்க இருந்த தேர்தல் ஜூலை 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பொதுக்குழு கூட்டம் ஜூலை 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :