என்னது களவாணி 2 படம் ஹிட்டா ? – சக்ஸஸ் மீட் வைத்துக் கொண்டாடிய படக்குழு !

Last Modified வியாழன், 18 ஜூலை 2019 (14:23 IST)
கடந்தவாரம் வெளியாகி பெரிதாகக் கவனம்பெறாமல் போன படத்தின் சக்ஸஸ் மீட் வைத்து அந்தப்படக்குழு கொண்டாடியது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல், ஓவியா நடித்து 2010ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் களவாணி. இயக்குனர் சற்குணம், ஓவியா ஆகியோருக்கு அறிமுக படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது களவாணி. படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பாகமான “களவாணி 2” பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஜூலை 5 அன்று ரிலிசானது.

ஆனால் சில பல காரணங்களால் முதல்நாள் காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகள் முடிந்த பின் இரண்டாவது காட்சியில் இருந்து படம் ஓடியது. ஆனாலும் படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாததால் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. இயக்குனர் சொந்த ஊரான தஞ்சை உள்ளிட்ட சில ஊர்களில் மட்டும் சுமாராக ஓடியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் சக்ஸஸ் மீட்டை வைத்து நேற்று படக்குழு கொண்டாடியுள்ளது திரையுலகில் உள்ளவர்களுக்கே அதிர்ச்சியை அளித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :