தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த இளம் ஹீரோ!

sivalingam| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (21:20 IST)
தனுஷ் நடித்த ‘அசுரன்’ மற்றும் பட்டாஸ்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் ஹீரோ இணைந்துள்ளார். அவர்தான் கலையரசன்
தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இன்று லண்டன் சென்று இறங்கிய கலையரசன், நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்
இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வரும் இந்த கேங்ஸ்டர் படத்தில் இந்திய கேங்ஸ்டராக தனுஷும், ஐரோப்பிய கேங்க்ஸ்டராக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஷ்ரேயாஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :