செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (11:48 IST)

நடிகை குஷ்பு மகளை மோசமான வார்த்தையால் திட்டிய நபர்...வெளுத்து வாங்கிய நடிகை!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 

 
இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 


 
இந்நிலையில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் குஷ்புவின் மகளை தவறாக வார்த்தையால் திட்டியுள்ளார். இதை கண்டு கடுப்பான குஷ்பூ அந்த நபரை மோசமாக திட்டி தீர்த்துள்ளார்.