திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:53 IST)

"மெய்மறந்து முத்தம் கொடுத்த காஜல் அகர்வால்" யாருக்கு தெரியுமா? புகைப்படத்தை பாருங்கள்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் வடித்து வருகிறார். 


 
அதைத்தொடந்து பாலிவுட் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்  அடித்த குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில்  திரைக்கு வரவிருக்கிறது. அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக புதுப்படமொன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இப்படி சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வரும் காஜல் சொந்தமாக பிசினெஸ் செய்து வருகிறார். இதற்கிடையில் அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிப் அடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது முதன்முறையாக டெல்லியில் தாஜ்மஹாலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 
 
அங்கு தாஜ்மஹாலை பார்த்து மெய்மறந்து முத்தமிட்ட புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காஜல் , "முதன்முறையாக தாஜ்மஹாலைப் பார்த்து மெய்மறந்து திகைக்கிறேன். தாஜ்மஹாலின் வசீகரிக்கும் அழகைப் பற்றி நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால், நேரில் சென்று பார்த்ததில்லை. இப்போது தான் என் மனம் நிறைவடைந்தது என்று கூறி தாஜ்மஹாலின் அழகை முத்தமிட்டு வர்ணித்து தள்ளியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.