திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 12 டிசம்பர் 2018 (10:21 IST)

கமலின் கடைசி படத்தில் அவருடன் இணையும் பிரபலம்!

கமல்ஹாசனின் கடைசிப் படமான இந்தியன் 2 படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இணைகிறார்.


 
உலக நாயகன் கமல் தனது கடைசிபடம் இந்தியன் 2 என அறிவித்துவிட்டார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். முந்தைய பாகமான இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திரைக்கதை இருந்தது.
 
இதில் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு எதிரான திரைக்கதை இருக்கும் என கூறப்படுகிறது.


 
இந்த படத்தை தொடர்ந்து முழு நேர அரசியலில் இறங்க உள்ளதாகவும், வரும் நாடாளுமனறத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும்  கமல் அறிவித்திருக்கிறார். எனவே, இந்தியன் 2 கமலுக்கு மிக முக்கியமான அரசியல் படமாக பார்க்கப்படுகிறது. இதில் பாடல்களுக்கு மிக முக்கியத்துவம் தரப்படும் என்று உறுதி. முந்தைய பாகத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நிலையில், இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் மூலம் கமலின் கடைசிப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பினை அனிருத் பெற்றுள்ளார்.