வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (14:55 IST)

தளபதி 64 படத்தில் இணைந்த கைதி நடிகர் – டிவிட்டரில் மகிழ்ச்சி !

தளபதி 64 படத்தின் நடிகர் நடிகைகள் பட்டியலில் கைதி படத்தில் நடித்த நடிகர் லல்லு இணைந்துள்ளார்.

கைதி என்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளப்தி 64 படத்தில் விஜய்யோடு மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறார்.

இப்போது இந்த படத்தில் கைதி படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் லல்லு இணைந்துள்ளார். இது சம்மந்தமாக டிவிட்டரில் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது டிவிட்டில் ‘ஒரு நல்ல விஷயத்துடன் புது வருடம் ஆரம்பமாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் அண்ணாவின் செட்டில் இருக்கிறேன். உங்களுக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. இரண்டாவது படமாக தளபதியுடன் நடிப்பது ஒரு கனவு போலவே இருக்கிறது. கைதி பாய்ஸ் டு தளபதி 64 பாய்ஸ். புத்தாண்டு வாழ்த்துகள்.’ எனத் தெரிவித்துள்ளார்.