வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:26 IST)

சுப்ரமண்யபுரம் வாய்ப்பை இழந்துட்டேன்… சசிகுமார் சார் மன்னிச்சுடுங்க – புலம்பும் நடிகை!

நடிகை காதல் சந்தியா தனக்கு சுப்ரமண்யபுரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

காதல் மற்றும் கூடல் நகரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சந்தியா ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் வெங்கட் சந்திரசேகர் என்பவரை  திருமணம் செய்துகொண்டார். அத்ன் பிறகு சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். இந்தத் தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்குப் பின் பெரிதாகப் படங்களில் நடிக்காமல் இருந்த சந்தியா,  இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சினிமாவில் முதல் சுற்றில் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர் சுப்ரமண்யபுரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்தது குறித்து மிகவும் வருந்துவதாகவும் சொல்லியுள்ளார். இதுகுறித்து ‘இயக்குனர் சசிகுமார் என் வீடு தேடி வந்து கதை சொன்னார். எனக்கு பிடித்திருந்தாலும் நான் தயங்கினேன். அதற்காக அவர் என் மேல் கோபமாக இருப்பார். உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் சார்’ எனக் கூறியுள்ளார்.