கடாரம் கொண்டான் ரிலிஸ் தேதி அறிவிப்பு – விக்ரம்முக்கு வெற்றி கிட்டுமா ?

Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (13:27 IST)
விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம்கொண்டான் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் பெட்டிக்குள் பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. அதுபோல சமீபகாலமாக அவர் நடித்த இருமுகன், ஸ்கெட்ச், சாமி 2 ஆகிய எந்தப் படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனால் அவர் கடாரம் கொண்டான் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

கமல் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் இந்தப்படத்தைத் தயாரிக்க கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். இதில் கமலோடு மல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும், நடிகர் நாசரின் மகன் அபி ஹசனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தப்படத்தின் போஸ்டர்கள், டிஸர் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ள நிலையில் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை கடாரம் கொண்டான் திரைப்படம்  வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :