கடைசி விவசாயி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

mahendran| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (16:26 IST)

விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம்.

புதிதாக தமிழுக்கு வந்துள்ள சோனி லைவ் தளத்தில் ரிலிஸாகும் என முன்னரே அறிவித்த நிலையில் இப்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30 ஆம் தேதி கடைசி விவசாயி திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :