1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (16:10 IST)

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் காவல்: நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது என்பதும் அதன் பின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து 2 நாட்கள் அவரிடம் காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர் என்பதும் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது