திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (22:06 IST)

கார்த்திக்கு கிடைத்தது நயன்தாராவுக்கு கிடைக்காதது ஏன்?

நடிகர் கார்த்தி மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர்களின் படங்கள் இன்று ஒரே நாளில் சென்சார் செய்யப்பட்டது. இதில் கார்த்தியின் படத்திற்கு 'யூ' சான்றிதழும், நயன்தாரா படத்திற்கு 'யூஏ' சான்றிதழும் கிடைத்துள்ளது.
 
இன்று ஒரே நாளில் கோலிவுட்டின் இரண்டு முக்கிய படங்கள் சென்சார் செய்யப்பட்டது. அவை கார்த்தியின் 'கடைகுட்டி சிங்கம்' மற்றும் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்கள் ஆகும்.
 
இதில் 'கடைகுட்டி சிங்கம்' படத்திற்கு 'யூ' சான்றிதழையும் 'கோலமாவு கோகிலா' படத்திற்கு 'யூஏ' சான்றிதழையும் சென்சார் அதிகாரிகள் அளித்துள்ளனர். பெற்றோருடன் மட்டுமே 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க முடியும் என்ற 'யூஏ' சான்றிதழை சென்சார் அதிகாரிகள் நயன்தாரா படத்திற்கு ஏன் கொடுத்தார்கள் என்பதை படம் ரிலீஸ் ஆனபின்னர்தான் தெரிந்து கொள்ள் முடியும்
 
இந்த நிலையில் சென்சார் சான்றிதழ் பெற்ற 'கடைகுட்டி சிங்கம்' திரைப்படம் வரும் ஜூலை 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. கோலமாவு கோகிலா' படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.