1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 28 ஜூன் 2018 (20:43 IST)

சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் தொடங்கியது!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்தின் டப்பிங் நேற்று தொடங்கியது.
 
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியுள்ள படம் ‘கனா’. பாடலாசிரியர், பாடகர், நடிகர் அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
 
திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிக்கெட்டராக விரும்பும் மகள் - அப்பாவுக்கு இடையிலான கதை தான் இந்தப் படம். அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின்
ஷூட்டிங், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்றது.
 
இந்நிலையில், நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. சத்யராஜ் பூஜையுடன் டப்பிங்கைத் தொடங்கினார். நேற்று சிவகார்த்திகேயன் அப்பாவின் நினைவு நாள். அந்த நாளில் டப்பிங்கைத் தொடங்கி அப்பாவுக்கு மரியாதை செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.