திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (20:25 IST)

17 வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயனால் தமிழுக்கு வரும் நடிகை

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தில் 17 வருடங்கள் கழித்து நடிகை இஷா கோபிகர் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
 
இயக்குனர் ரவிக்குமார் `இன்று நேற்று நாளை பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளார். விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. 
 
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார்.
 
இந்நிலையில், இப்படத்தில் 17 வருடங்கள் கழித்து நடிகை இஷா கோபிகர் ரீஎன்ட்ரி ஆகவுள்ளார். இவர் பிரசாந்துடன் காதல் கவிதை, அரவிந்த்சாமியுடன் என் சுவாச காற்றே, விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.