1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:32 IST)

தனுஷைப் பார்த்து பின்வாங்கிய ஜோதிகா

செக்கச்சிவந்த வானம்’  படத்தின் வெற்றிக்கு பிறகு  நடிகை ஜோதிகாதுமாரி சுலு  என்ற  ஹிந்தி படத்தின் ரீமேக்கானகாற்றின் மொழி’  படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது.
 

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் மற்றும்  டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். இதில் நடிகர் சிம்பு, லக்ஷ்மி மஞ்சு, விதார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காஷிப் இசையமைத்துள்ள  இந்த படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  மேலும் அண்மையில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது, படத்தின் ரிலீஸை நவம்பர் மாதம் தீபாவளிக்கு பிறகு ஒத்தி வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்,  அக்டோபர் 18ல் படத்தை வெளியிட யோசித்தோம். ஆனால் அதே நாளில் வெளியாகும் படங்களான தனுஷின் வடசென்னை, சண்டகோழி, திருப்பதிசாமி குடும்பம், எழுமின், அண்டாவக் காணோம் போன்ற படங்கள் அதே மாதத்தில் அடுத்தது வெளியாகவுள்ளதால், எங்கள் படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான திரைகளும், காட்சிகளும் கிடைக்காது .   அதனால் காற்றின் மொழி படத்தை வரும் தீபாவளிக்கு பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.