செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (20:47 IST)

டைட்டானிக் ஷாட் உருவானது இப்படிதான் - விக்னேஷ் சிவன் வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். 
 
இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அண்மையில் வெளியான இப்படத்தின் டைட்டானிக் போஸ்டர் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் வெளியிட்டு படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறார்.