வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (22:11 IST)

காலா படத்தின் டப்பிங் தொடங்கியது

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் இன்று முதல் தொடங்கியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, சாக்‌ஷி அகர்வால், ஈஸ்வரி ராவ், சம்பத், அருள்தாஸ் என பலர் நடித்துள்ள படம் ‘காலா’. இந்தப் படத்தை, தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.
 
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். மும்பை மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் நடைபெற்று வரும் இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்றுமுதல் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளன. ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பிஸியாக இருப்பதால், அவர் அடுத்த வாரத்தில் டப்பிங் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.