1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 25 மார்ச் 2018 (13:04 IST)

திட்டமிட்டபடி காலா திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சி

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் கபாலி திரைப்படம் திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முயற்சி நடைபெறுகின்றன.
கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் ரஜினி, ஹூமாகுரோசி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டீல், சாயாஜி ஷின்டே, ரவி காளே மற்றும் பலர் நடித்துள்ள படம் காலா. இத்திரைப்படம் ஏப்ரல் 27-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, ‘காலா’ படம் திட்டமிட்டபடி, அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்தது.
 
வர்த்தக சபையில் இருந்து தனுஷ் நிறுவனத்தின் பெயரில் ‘காலா’ படம் தணிக்கை சான்றிதழ் பெற தேவையான அனுமதி கடிதங்களை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி, ‘காலா’ படத்தை திரைக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.