புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (09:42 IST)

குடிபோதையில் ராணாவுடன் உல்லாச நடனமாடிய டிடி! - ஷாக்கிங் புகைப்படம் இதோ!

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 
விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக  தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். அதே தொலைக்காட்சியில் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பேட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை  டிடி தொகுத்து வழங்கி வருகிறார். பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் டிடி கில்லாடி
 
இதற்கிடையில் கடந்த 2014-ஆம் அண்டு ஜூன் 29-ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டனர். 
குடும்ப வாழக்கையில் பல பிரச்னைகளை சந்தித்தாலும் தனது கேரியரில் அதீத கவனமெடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் கூடவே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகரான ராணாவுடன் இரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று மது போதையில் உல்லாச நடனமாடியதாக கூறி பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதை உறுதிப்டுத்தும் வகையில் டிடி சமீபத்தில் ராணாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.