வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 23 மே 2020 (13:03 IST)

அதிகாரத்துல இருக்குறவங்களுக்கு அடிபட்டத்தோட வலியை புரியவைக்கணும் - க/பெ.ரணசிங்கம் டீசர்!

க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவகளுடன் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராகவும், சண்முகம் முத்துசாமி வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் பணிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். தண்ணீருக்காக அதிகாரத்தில் இருப்பவர்களின் அராஜகத்தை எதிர்த்து போராடி வெற்றி காணும் சாதாரண குடிமக்களின் வாழ்வை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நிச்சயம் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.