ஜெயில்ல தூக்கிப் போட்டா தாங்குவாரா?... விஜய்க்கு தயாரிப்பாளர் கே ராஜன் கேள்வி!
சமீபத்தில் நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தொகுதி வாரியாக சந்தித்தார். அவர்களுக்கு பரிசுகளை வழங்கிய நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடந்தது. விஜய்யின் இந்த நிகழ்ச்சி அவரின் அரசியல் வருகைக்கு அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து அரசியல் பிரபலங்களான நாம் தமிழர் சீமான், தமாகா வாசன் மற்றும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கேள்விகள் ஊடகங்களால் கேட்கப்பட்டன. அந்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் கே ராஜன் “ஏற்கனவே இருக்கும் கட்சிகள் சாதாரண கட்சிகள் இல்லை. திமுக, அதிமுக எல்லாம் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம். பாஜகவும் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. நாளைக்கே உள்ள தூக்கி போட்டாங்கன்னா ரெண்டு நாள் தாங்குவாரா? மெர்சல்ல வசனம் பேசுனதுக்கு நெய்வேலில இருந்து அழைச்சிட்டு வந்து ரெய்ட் நடத்துனாங்க. அதுல நிலைகுலைந்து போன அப்போதில் இருந்து இப்போது வரை அரசியல் பேசவில்லை. தில்லா எதிர்த்து போராடி இருக்கணும். அரசியலுக்கு வந்துட்டா கட்சிகள எதிர்த்து சமாளிக்கவேண்டும்” என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.