1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 மே 2022 (08:51 IST)

”பேட்டி கொடுக்க காசு வசூலிக்கிறேன்”… தயாரிப்பாளர் கே ராஜன் தடாலடி!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வரும் நபராக கே ராஜன் இருந்து வருகிறார்.

தயாரிப்பாளர், நடிகர் மற்றும் பைனான்சியர் என பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் கே ராஜன். ஆனால் சமீபகாலமாக இவர் திரைப்படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கோபமாகவும், தமிழ் சினிமா ஹீரோக்களை திட்டியும் பேசி பிரபலமானார். இதையடுத்து இணையதள வீடியோ சேனல்களிலும் இவரின் பேட்டிகள் அதிகளவில் பார்க்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் சமீபத்தில் நடந்த போலோமா ஊர்கோலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கே ராஜன் “ அண்மைக்காலமாக இணைய தளங்களில் நேர்காணல் வழங்குவதற்காகக் கட்டணம் வசூலிக்கிறேன். இந்தத் தொகையை ஏழை எளிய மக்களின் கல்விக்காக நன்கொடையாக வழங்கி வருகிறேன். நான் பால்ய காலங்களில் பிறருடைய  உதவியால் கல்வியைப் பயின்றேன். தற்போது மற்றவர்கள் கல்வி பயில உதவுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.