அறிக்கை தயாராவது எப்போது? நீட் தேர்வை ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஏகே ராஜன் தகவல்!
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து ஒழிப்போம் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. அதன்படி ஆட்சிக்கு வந்த பிறகு நீட்தேர்வு தாக்கம் குறித்து ஏகே ராஜன் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மூன்று கட்ட ஆலோசனையை முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று மூன்றாம் கட்ட ஆலோசனையின் போது நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எதிர்ப்பாகவும் நிறைய கருத்துக்கள் வந்துள்ளன என்று தெரிவித்த ஏகே ராஜன் நீட்தேர்வு தாக்கம் குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
அனைத்து கருத்துக்களையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் 4ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஏகே ராஜன் தெரிவித்தார். இந்த நிலையில் ஏகே ராஜன் குழுவினர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.