நீட் தேர்வின் தாக்கம்: அறிக்கை வெளியிட அவகாசம் நீட்டிப்பா?
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் என்பவரது தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு சரியாக ஒரு மாதத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது
இந்த நிலையில் ஏகே ராஜன் தலைமையிலான குழு ஏற்கனவே இரண்டு முறை ஆலோசனை கூட்டத்தை நடத்தியது என்பதும் இன்று மூன்றாவது முறையாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏகே ராஜன் குழுவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது கருத்துக்களை நீட் தேர்வு குறித்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்குள் நீட்தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஏகே ராஜன் தெரிவித்துள்ளார். கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது