வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (06:49 IST)

ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு சமீபத்தில் ஏற்படுத்தியது என்பதும் அந்த குழு ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்தநிலையில் அந்த அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தனிச்சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது
 
மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டுமென்றும் ரீட் தேர்வு நீட் தேர்வு ரத்து சட்டம் ஏற்றுவதன் மூலம் மருத்துவர் சேர்க்கையில் சமூகநீதி உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மேலும் நிட் தேர்வுக்கு முன் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் நீட்தேர்வு அறிவிக்கப்பட்டதும் இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மேலும் நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் அரசு மற்றும் பொது அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் தற்போது தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது