திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:24 IST)

ரஜினியின் அரசியல் வருகை… குருநாதர் வீட்டில் இருந்து வந்த வாழ்த்து!

ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளதை அடுத்து கவிதாலயா நிறுவனம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ரஜினியின் சினிமா குருநாதர் என்றால் அது பாலச்சந்தர்தான். ரஜினி தமிழ் சினிமா உலகில் அதிக மரியாதை வைத்துள்ளவர்களில் பாலச்சந்தர்தான் முதன்மையானவர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை இப்போது உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் ’நமது சூப்பர் ஸ்டாருக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். பெருமை மிகு சாதனையை நீங்கள் அரசியலில் செய்ய வாழ்த்துகள்.’ எனக் கூறியுள்ளார். எனக் கூறி பல வருடங்களுக்கு முன்னர் கே பாலச்சந்தர் ரஜினியிடம் அரசியல் பற்றி கேட்ட கேள்வி குறித்த வீடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.