திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:44 IST)

ப்ரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்கள்தானாம்!

விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ப்ரண்ட்ஸ் படத்தில் ஜோதிகாதான் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தாராம்.

2001 ஆம் ஆண்டு விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, ரமேஷ் கண்ணா மற்றும் வடிவேலு ஆகியவர்கள் நடித்து வெளியான திரைப்படம் ப்ரண்ட்ஸ். இந்த படத்தை மலையாள இயக்குனர் சித்திக் இயக்கி இருந்தார். இந்த படத்தில் வடிவேலுவின் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க தேர்வான நடிகைகள் தேவயானியும் விஜயலட்சுமியும் இல்லையாம். விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சுவலட்சுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சில பல காரணங்களால் அது நடக்காமல் போக தேவயானியும் விஜயலட்சுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.