அதுக்காக ஒதுக்கி வைப்பீங்களா: தீபிகா படுகோன் கேள்வி

VM| Last Modified செவ்வாய், 12 மார்ச் 2019 (14:23 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்தார்.


 
இவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் யாரிடமும் இவ்வளவு சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கட்டாயப்படுத்தியது கிடையாது. ஆனால் என்னை அதிக சம்பளம் வாங்கும் நடிகை என அழைப்பதை  கேட்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 
 
பொதுவாக திருமணம் ஆகிவிட்டால் நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல.   திருமணம் ஆன நடிகைகள் நடித்தால் படம் வசூலாகாது என கூறுவதை ஏற்க முடியாது.  பெண்கள்  திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் நன்றாக ஓடுகின்றன. சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருக்கலாம். அவர்கள் நடிச்சது போதும் என்று ஒதுங்கி இல்லற வாழ்க்கையுடன் இருந்து விடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். எனவே  திருமணம் ஆன நடிகைகளை ஒதுக்கி வைப்பது தவறு என்றார்.  


இதில் மேலும் படிக்கவும் :