வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (20:57 IST)

ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதிய திரைக்கதையை வாசித்து அழுதுவிட்டேன்- ராஜமெளலி

ஆர்.எஸ்.எஸ் குறித்து என் தந்தை எழுதியிருக்கும் திரைக்கதையை நான் வாசித்தபோது அழுதுவிட்டதாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
 

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர், நான் ஈ, மகதீரா, பாகுபலி1-2, .ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, மகேஷ்பாபு நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையில், இவர் இயக்கத்தில், ஜூனியர் என்டி.ஆர்.  ராம்சரண் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி, வசூல் குவித்துள்ள, ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற பாடல் நாட்டுகுத்து ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குத்தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி ஒரு கதையை உருவாக்கும் முனைப்பில் ராஜமெளலி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கான திரைக்கதையை அவரது தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு  பேட்டியளித்தார். அதில், ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி எனக்கு தெரியாது. இந்த அமைப்பு பற்றி கேள்விதான் பட்டிருகிறேன். இதன் வளர்ச்சி பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி என் தந்தை எழுதிய திரைக்கதையை வாசித்தபோது பலமுறை அழுதுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''இந்தக் கதையை நான் இயக்குவேனா என்று தெரியாது. ஒருவேளை இக்கதையை எழுதினால் நான் பெருமப்படுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.