வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (12:52 IST)

ஜூலி தயவுசெய்து பேசாமல் இரு; அட்வைஸ் செய்த சமுத்திரக்கனி

பிக்பாஸ் போட்டியாளர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும்  ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜுலி அங்கு தனது நடவடிக்கைகளால் விமர்சனத்துக்கு உள்ளானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஜூலி எங்கு சென்றாலும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அவரும் விட்டுக்கொடுக்காமல் பேசி  வருகிறார்.
 
பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராகக்  கலந்துகொண்டார். அப்போது பேசிய சமுத்திரக்கனி, ஜூலி தயவுசெய்து சில நாட்களுக்கு எதை பற்றியும் பேசாமல் இருந்தால்,  மக்களே உன்னை மன்னித்துவிடுவார்கள்' என்று ஜூலிக்கு அறிவுரை செய்துள்ளார்.