செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (11:14 IST)

சினேகனுக்கு ஜோடியாக ஓவியா… இது ஓவியாவுக்குத் தெரியுமா?

சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அதிக புகழுக்கு ஆளானவர்கள் சினேகனும், ஓவியாவும். அதுவும் ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பித்து கலக்கி வருகின்றனர் ஓவியா ரசிகர்கள். இந்நிலையில், ஓவியாவும், அவருக்கு நெருக்கமான சினேகனும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.
 
இந்தப் படத்தை, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்த சத்யா தயாரிப்பதாகவும் தகவல் வந்தது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டு, சினேகன் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், ஓவியாவிடம் இன்னும் இவர்கள் கதை சொல்லவே இல்லை.
 
அந்தப் பொறுப்பையும் தான் எடுத்துக் கொண்ட சினேகன், ஓவியாவை சம்மதிக்க வைப்பது என் வேலை என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். தற்போது ‘காஞ்சனா 3’, ‘காட்டேரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஓவியா. அவரிடம் கதை கூட சொல்லாமல், அவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.