1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (14:19 IST)

ஜூனியர் என்.டி.ஆரின் 'அரவிந்த சமிதா' ட்ரெய்லர் வெளியீடு

த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் அரவிந்தசமிதா. இந்த படத்தை ஹாரிக்கா & ஹாஸினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இதில் ஹீரோவாக ஜுனியர் என்டிஆர், அவருக்கு ஜோடியாக  பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.   அரவிந்த சமீதா படத்துக்கு எஸ். எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் ட்ரெய்லர் காந்தி ஜெயந்தி யை முன்னிட்டு வெளியாகி உள்ளது.வழக்கம் போல் வெளிநாட்டில்  இருந்து வரும் ஹீரோ , சொந்த ஊரில் இருக்கும் பரம்பரை பகையாளியை, அநியாயம் செய்பவரை வென்றாரா, காதலியை கரம்பிடித்தாரா! என்பதே கதை, என்பதை ட்ரைலரை பார்த்தவுடன் புரிந்து கொள்ளலாம். ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு இந்த ட்ரெய்லர் விருந்தாக அமைந்துள்ளது.