செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2017 (12:36 IST)

நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற ஒரு குத்து  பாடலான 'சொடக்கு' என்ற பாடல் டீசர் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது. இப்படதுக்கு அனிருத்  இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ்,  ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை  தயாரித்துள்ளது.
 
மலையாளத்தில் வெளியான வெளிப்பாடின்டே புஸ்தகம் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் பாடல் மிகவும் பிரபலமானது. இந்த  பாடலின் மூலம் பிரபலமானவர் ஷெரில். அவருக்கு சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததையடுத்து நடிக்க தயார் என்று  தெரிவித்திருந்தார் ஷெரில்.
 
இந்நிலையில் அவர்கள் விரைவில் சினிமாவில் அறிமுகமாவார்கள் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்துள்ளனர். அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதற்காகத் நேற்று வெளியிடப்பட்ட இரண்டாவது பாடல் டீசரில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.