ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2017 (11:14 IST)

நடுக்கடலில் சிக்கிய நடிகர் சூர்யா பத்திரமாக மீட்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக இருக்கிறார் நடிகர் சூர்யா. இவரது தயாரிப்பில் உருவான மகளிர் மட்டும் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

 
இந்நிலையில், அகரம் ஃபவுண்டேஷனுக்காக அமெரிக்காவின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி பலரின் கல்விக்கு  உதவி செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் நேற்று அவர் சியாட்டல் நகருக்கு வருவதற்கு முன் பசிபிக்கடலில் படகில் பயணம் செய்துள்ளார். அந்த  அதிவேக படகு திடீரென பாதி வழியில் நின்றுள்ளது. இதனால், நடுக்கடலில் படகில் தத்தளித்த சூர்யாவை மீட்க உடனே அந்நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கு சென்ற போலீசார் பாதுகாப்பாக அவர்களை மீட்டுள்ளனர்.