ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’: முக்கிய அப்டேட்
ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம்: முக்கிய அப்டேட்
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவரான ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
சந்தோஷ் ராஜன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை அதாவது ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பொத்தி பொத்தி வளத்த புள்ள என்று தொடங்கும் இந்த பாடல் இசை ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
மேலும் இது குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது