1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:01 IST)

ஜீவா-சிவா படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

ஜீவா-சிவா படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?
ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்த திரைப்படமான கோல்மால் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மொரிஷியஸ் தீவில் நடந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜீவா மற்றும் சிவா முக்கிய வேடங்களில் நடித்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் பொன் குமரன் இயக்கியுள்ளார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொரிஷியஸ் தீவில் தொடங்கி தற்போது அதே மொரிசியஸ் தீவில் முடிவடைந்துள்ளது
 
ஜீவா, சிவா, பயல் ராஜ்புட், தன்யாஹோப், ஆர்த்தி, வையாபுரி, சுப்பு பஞ்சு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.