சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா & ஸ்ரீகாந்த்… கலர்புல் போஸ்டரோடு வெளியான Title
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நிறைவுற்றது.
இதையடுத்து இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு காஃபி வித் காதல் என்ற தலைப்பை வைத்துள்ளனர். தலைப்போடு படத்தின் கலர்புல்லான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.