மருத்துவர்கள் உதவியோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட இயக்குனர் கோதார்த்!
பிரெஞ்ச் சினிமாவின் அடையாளமாக கருதப்படும் இயக்குனரான ழான் லுக் கோதார்த் தனது 91 ஆவது வயதில் நேற்று இயற்கை எய்தினார்.
பிரெஞ்ச் சினிமாவில் உருவாகிய புதிய அலை இயக்குனர்களில் ஒருவரான ழான் லுக் கோதார்த், உலகளவில் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் இயக்கிய பிரெத்லெஸ் உள்ளிட்ட படங்கள் உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங்களில் ஒன்றாகும்.
91 வயதாகும் அவர் நேற்று ஸ்விட்சர்லாந்தில் இயற்கை எய்தினார். அவரது மரணத்துக்குப் பிறகு அவரின் வழக்கறிஞர் “கோதார்த் தன்னுடைய வாழ்க்கையை மருத்துவர்களின் உதவியோடு முடித்துக்கொண்டார்.” எனக் கூறியுள்ளார். ஸ்விட்சர்லாந்தில் இதுபோல தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.