திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (08:02 IST)

ரஜினியை அறைய சொன்னார்கள்… முத்து படத்தின் வாய்ப்பை இழந்த நடிகர்!

முத்து படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அதற்கு ஏன் மறுத்தேன் என்றும் நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிக்கு உலகளவில் ரசிகர்களைப் பெற்றுத்தந்த திரைப்படம் முத்து. ஜப்பானில் மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த திரைப்படம். தென்மாவின் கொம்பத்து எனப்படும் மலையாளப் படத்தின் தழுவலான அந்த படத்தில் ரஜினி வேலைக்காரனாகவும், சரத்பாபு எஜமானராகவும் நடித்திருந்தனர். சரத்பாபு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க மலையாள நடிகரான ஜெயராமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த காரணத்தை வெளியிட்டுள்ளார். கதையின் படி ரஜினியை அறைவது போன்ற காட்சி ஒன்று படத்தில் இருந்துள்ளது. அதனால் தான் நடிக்க மறுத்ததாகக் கூறியுள்ளார்.