புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 4 ஜூன் 2020 (23:48 IST)

நிறப்பாகுபாட்டிற்கு எதிராக என் மகனை நான் இப்படி வளர்ப்பேன் - ரஜினி பட நடிகை !

தமிழ் சினிமாவில்  மதராசப்பட்டிணம், எந்திரன் 2.0 ஆகிய படங்கலில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தில் இணைந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

சில நாட்களால அமெரிக்காவில் நடந்துவரும் நிறப்பாகுபாட்டிற்கு எதிரான அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நேற்று நான் முதல் கல்லை எடுத்து வைத்துள்ளேன்.ஆனால் அடுத்த பிரச்சனை ஒன்று வந்தால் இதை மறந்துவிடுவதல்ல. என் குழந்தையை நிறப்பாகுபாட்டிற்கு எதிராக  அன்பு, மனித நேயத்துடன் வளர்ப்பேன் என்றும் அவனை அனைவரையும் சமமாக மதிக்கும்படி வளர்ப்பேன் என்று கூறியுள்ளார்.