1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஜூன் 2020 (17:15 IST)

கருணாநிதிக்கு ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? நெட்டிசன்களின் விளக்கம்

கருணாநிதிக்கு ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?
திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் சமூக வளைதளத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் உள்பட பலர் கருணாநிதிக்கு தங்களுடைய டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கருணாநிதி தனது நெருங்கிய நண்பர் என்றும், தமிழகத்தில் ஒப்பற்ற தலைவர் என்றும், அவருடைய மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டது என்றும் கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் இடையே வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் நேற்றைய கருணாநிதி பிறந்த நாளில் கருணாநிதிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டானதால், இந்த நேரத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தால் தன்னுடைய பெயரும் சேர்த்து டேமேஜ் ஆகும் என்று ரஜினிகாந்த் நினைத்திருப்பார் என்றும், அதனால் தான் அவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் ஒரு சிலர் கூறி வருகின்றனர் 
 
இன்னும் ஒரு சிலரோ கருணாநிதியை ரஜினி மறந்து விட்டதாகவும் அதனால் தான் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். மேலும் வரும் தேர்தலில் திமுகவை முக்கிய எதிரியாக கொண்டு தேர்தல் களத்தில் இறங்கவுள்ளதால்தான் அவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.