புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:20 IST)

ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில்  வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.