வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (16:09 IST)

மிஷ்கின் உதவியாளர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்… இன்று பூஜை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி பேராண்மை, தனி ஒருவன் பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் பொன்னியின் செலவ்ன் 2 திரைப்படம் ரிலீஸான நிலையில் தற்போது சைரன் மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு அடுத்து அவர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய புவனேஷ் இயக்க உள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இன்னும் ஒரு முன்னணி நடிகை நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடக்கும் நிலையில் முதல் கட்ட ஷூட்டிங் ஜூலை 20 ஆம் தேதி முதல் நடக்கும் என சொல்லப்படுகிறது.