வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (15:01 IST)

நீதான் என் சொர்க்கம்... ஜெயம்ரவிக்கு ரொமான்டிக் வாழ்த்து கூறிய மனைவி!

வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல்,  தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதில், ' ‘நான் விதியை நம்புவதற்கு நீதான் காரணம், நீதான் என் சொர்க்கம்
உங்கள் அன்பாக அல்லது உங்கள் தியாகமாக இருக்க நான் எதையும் செய்வேன் ‘நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.