திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 19 ஜூன் 2022 (15:12 IST)

மக்கள் முதல்வர் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்: செல்வராகவன்

selvaragavan
மக்கள் முதல்வர் என்றால் அது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் செல்வராகவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியபோது ’எனக்கு சிறுவயது முதலே முக ஸ்டாலின் மிகவும் பிடிக்கும் என்றும், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வர மாட்டாரா என மக்கள் ஏங்கிக் இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மக்கள் முதல்வர் என்றால் அது முதலமைச்சர் முக ஸ்டாலின் தான் என்றும் நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சராகத்தான் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் புதுப்பேட்டை 2,  ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய திரைப்படங்கள் விரைவில் உருவாக்கப்படும் என்றும் அவர் செல்வராகவன் கூறினார்